விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு உதவி கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் நக்கீரன், நகரட்சி ஆணையர் பிரபாகரன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. அப்போது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story