தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி காரைக்குடியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி காரைக்குடியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், சிவகங்கை நேரு யுவகேந்திரா, ஜான் பாவா இளையோர் நற்பணி மன்றம், விவேகானந்தா இளையோர் நற்பணி மன்றம், காரைக்குடி ரோட்டரி கிளப் சார்பில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கியது. பேரணிக்கு நேரு யுவகேந்திரா இயக்க சிவகங்கை மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் வரவேற்றார். அழகப்பா அரசு கலைக் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பாலசுப்ரமணியன், கவிதா, அழகர், நுண்களை மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், நேரு யுவகேந்திரா இயக்கத்தின் தொண்டர்கள், சுவாமி விவேகானந்தா இளையோர் நற்பணி மன்ற தலைவர் யோகநாதன், ஜான் பாவா இளையோர் நற்பணி மன்ற மாணவ- மாணவிகள் ஒருங்கிணைப்பாளர் சவுந்தரபாண்டியன், இந்திய மருத்துவ கிளை காரைக்குடி செயலாளர் டாக்டர் குமரேசன், காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராசகுமார், ரோட்டரி கிளப் சங்க தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் வாக்களிப்பதன் கடமையும், அவசியத்தையும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி சென்றனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சித்ரா செய்திருந்தார்.

மாதிரி வாக்குச்சாவடி

இதேபோல் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்களிடம் வாக்களிக்கும் உரிமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை மாணவர்கள், ஆசிரியர்கள் எடுத்தனர். பின்னர் மாணவர்கள் வரிசையில் நின்று வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களிடம் பள்ளி துணை முதல்வர் சத்யமூர்த்தி கலந்துரையாடினார். முடிவில் தமிழாசிரியர் செயம்கொண்டான் நன்றி கூறினார்.

இதேபோல் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார். வாக்காளர் சேர்ப்பு அலுவலர் ராமதிலகம், வாக்காளர் அறிமுக அலுவலர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி வரவேற்றார்.. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வாக்காளர்களின் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாதிரி தேர்தலானது தேர்தல் அலுவலர்களால் வாக்குச்சீட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு மாதிரி வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட வாக்கு பெட்டியில் வாக்கை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராஜபாண்டி, அமலதீபா ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை கமலாபாய் நன்றி கூறினார்.


Next Story