போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
சீர்காழியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பாக போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை உதவி கலெக்டர் அர்ச்சனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அரிமா சங்க நிர்வாகி சக்திவீரன் வரவேற்றார். தொடர்ந்து பஸ் நிலைய வளாகத்துக்குள் இருந்த பொது மக்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஊர்வலம் கச்சேரி ரோடு, ஆஸ்பத்திரி சாலை, கடைவீதி வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்து அடைந்தது. இதில் துணை தாசில்தார் ரஜினி, கல்லூரி விரிவுரையாளர் முத்துக்குமாரசாமி, தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வு தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.