பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகனூர் ஊராட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் இந்திராணி கண்ணையன் தலைமையில் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக வந்து பஸ் நிறுத்தத்தை அடைந்தது. ஊர்வலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் முழக்கமிட்டு வந்தனர். இதில் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள், சிறுகனூர் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் உஷா, நித்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சி அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


Next Story