தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா கதிரம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பாரத பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தூய்மைப்படுத்தினார்கள். பின்னர் கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மருந்தாளுனர் இளங்கோ முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தை மருத்துவ அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்து பேசினார். ஊர்வலத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அர்ச்சனா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story