மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம்
x

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

ஆண்டிமடம் வட்டார வளமைய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு விளந்தை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளம் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரீடு.செல்வம் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தன. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story