போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

திமிரியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவுபடி, திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்கு பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.‌

திமிரி பஸ் நிலையம் அருகில் தொடங்கிய ஊர்வலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story