பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் பள்ளகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் "பிளாஸ்டிக்கை ஒழிப்போம், தூய்மையை பேணுவோம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வ லத்தை பள்ளி தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர். ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சிறுவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


Next Story