குப்பைகள் இல்லாத நகராட்சி உருவாக்க விழிப்புணர்வு ஊர்வலம்
ஜோலார்பேட்டையை குப்பைகள் இல்லாத நகராட்சி உருவாக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 16,7,8,9 ஆகிய வார்டுகளில் மற்றும் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையின் இருபுறமும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணி நடைபெற்றது. மேலும் பொது மக்களுடைய மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
மேலும் ஜோலார்பேட்டை நகராட்சி குப்பைகள் இல்லாத நகராட்சி உருவாக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. எனது குப்பை எனது பொறுப்பு, குப்பைகள் இல்லாத நகராட்சி உருவாக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமையில் தூய்மைப் பணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் பழனி பொறியாளர் கோபு, நகர்மன்ற துணை தலைவர் இந்திரா பெரியார் தாசன் உள்பட உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.