விழிப்புணர்வு கூட்டம்
போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
காரியாபட்டி,
நரிக்குடி அருகே அ.முக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு பற்றியும் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இதில் அ. முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய, சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என கூறினார். தொடர்ந்து அவர் மரக்கன்றுகளை நட்டார்.
Related Tags :
Next Story