விழிப்புணர்வு கூட்டம்
சிவகாசி சுகாதார மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி சுகாதார மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவகாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைரக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-மது பழக்கத்தில் இருந்து மீண்டு வர அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடிநீரை காய்ச்சி வடிக்கட்டி குடிக்க வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அச்சகத்தின் அதிபர் தனபால், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் டேனியல், காசநோய் ஆய்வக சிகிச்சை மேற்பார்வையாளர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.