விழிப்புணர்வு கூட்டம்


விழிப்புணர்வு கூட்டம்
x

மின்னணு கழிவுகளை கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அமல்படுத்தப்பட்ட மின்னணு கழிவுகள் மேலாண்மை சட்டம் 2022-ன் படி தூய்மை பணியாளர்கள் மின்னணு கழிவுகளை கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story