வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்


வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x

வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஏலகிரிமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு சைபர் கிரைம், ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, மற்றும் ஸ்டேட் வங்கி மேலாளர் சரவணகுமார் ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, வாடிக்கையாளர்கள் யாரும் வங்கி சம்பந்தப்பட்ட எந்த ஒரு குறுஞ்செய்திகளையும், தனிப்பட்ட விவரங்களையும் யாரிடமும் பகிறக்கூடாது, மொபைல் பேங்கிங் விவரங்களையும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி பேசினர்.

மேலும் ஏ.டி.எம். பணம் பரிவர்த்தனையின் போதும் வங்கியின் முன் சந்தேகத்திற்கு உள்ளான நபர்கள் யாரேனும் வங்கிக்கு அருகில் சுற்றி திரிந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் வேண்டும். மக்கள் அனைவரும் தேவையற்ற கடன் செயலிகளை பதிவிறக்க வேண்டாம் என்றும், அதனையும் மீறி பதிவிறக்கம் செய்தால் உங்கள் மொபைலில் உள்ள தனிப்பட்ட விவரங்களை அனைத்தும் திருடப்படும் என்றும், குறுஞ்செய்திகளை பகிர வேண்டாம் என்று கூறினர்.

இதில் வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story