கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில்மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில்மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலையில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்பணர்வு பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் முனியசாமி, உதவிபொறியாளர் சுப்பையா ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மின்சாரத்தை உபயோகிக்கும் முறை, விபத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? போன்றவை குறித்து விளக்கி கூறினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story