பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்


பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)

பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவரும் போதைத் தடுப்பு மன்றத்தின் சார்பில் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை மற்றும் போதைத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராஜபாளையம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு நிகழும் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி, உடல் ரீதியாகத் தவறான தொடுதல்கள் போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகள் குறித்தும், இதுபோன்ற சிக்கலான சூழ்நிலைகளில் மாணவிகள் உடனடியாக 1098, 181,100,155260 என்ற புகார் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என கூறினார். மேலும், கூட்டத்தில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கம் மற்றும் சட்டங்கள் குறித்தும் பேசினார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி பேசும்போது, மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், சாலை விபத்துக்கள் ஏற்பட்டுவிடும் என கூறினார். கூட்டத்தில், போதைத் தடுப்பு மன்ற உறுப்பினர்களும் 6 முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் உதவித் தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.


Next Story