கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் (தலைமையிடம்), துணை சூப்பிரண்டுகள் பழனிசாமி, சீராளன் (மங்களமேடு) தலைமையிட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். வக்கீல் பிரபு மற்றும் சுந்தரராஜ், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சினேகா ஆகியோர் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்காக போலீசார் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், குழந்தை தொழிலாளர் தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளில் செயல்பட வேண்டிய தெளிவான வழிமுறைகள் குறித்து சட்டப்பூர்வ அறிவுரைகளை வழங்கினர். மேலும் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம், மனித கடத்தல் குற்றங்கள் போன்றவை குறித்தும் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.