அரியலூரில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை விழிப்புணர்வு கூட்டம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரியலூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் நாளை நடக்கிறது.
அரியலூர்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (திங்கட்கிழமை) விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை விவாதித்து ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி, கிராமத்தில் உள்ள குளங்களை பொதுமக்கள் உதவியுடன் தூய்மைப்படுத்துதல் மற்றும் சுத்தமான, பசுமையான கிராமங்களை உருவாக்கிட நெகிழிகளை ஒழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. கூட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டு கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story