விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி


விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி
x

விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் முழு சுகாதார பணிகள் நடைபெற்றது. இதையொட்டி பஸ் நிலைய பகுதியில் மோட்டார் சைக்கிள், ஆட்டோக்கள் பேரணி நடைபெற்றது. இதனை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத்தலைவர் உமாநாத், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பேரணியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் மஞ்சள் பை வினியோகம் செய்தனர். மேலும் நகரை தூய்மையாக வைப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.



Next Story