சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் கையாள்வது குறித்துஅரசு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் கையாள்வது குறித்துஅரசு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் கையாள்வது குறித்து அரசு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் சமூக வலைதளங்கள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஹெலன் ரூத் சாய்ஸ், சுப்பிரமணியன், தமிழ் வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கல்லூரி மாணவர்கள் பாதுகாப்புடன் எவ்வாறு பயன்படுத்துவது, அதில் உள்ள இடர்பாடுகள், முகநூல், வாட்ஸ் அப்பில் முகப்பு பக்கத்தில் மாணவிகளின் புகைப்படத்தை வைப்பதால் ஏற்படும் குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள், ஆன்லைனில் நடைபெறும் மோசடிகள், மாணவர்கள் எவ்வாறு தங்களை சமூக வலைதளங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, சமூக வலைதளங்களை எவ்வாறு முறையாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் கல்லூரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story