போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு


போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு
x

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். இதில் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் ராஜ மகேந்திரன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மாலதி தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ் மற்றும் ஜே.ஆர்.சி. கன்வினர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.போக்குவரத்து காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் சக்தி முத்துவேல் மற்றும் முதல் நிலை காவலர்கள் நிர்மல்ராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகள், சிக்னல் பார்த்து வாகனம் ஓட்டுவது குறித்து பேசினார்கள். இறுதியில் நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜெயமுருகன் நன்றி கூறினார். இதில் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் வள்ளி விநாயகம் மற்றும் துணை முதல்வர் மகிமா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story