கோத்தகிரியில் மனித கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு


கோத்தகிரியில் மனித கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
x
தினத்தந்தி 8 May 2023 12:30 AM IST (Updated: 8 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மனித கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் மனித கடத்தல் தடுப்பு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் பேசுகையில், மனித கடத்தல் என்பது உழைப்பு அல்லது வணிக பாலியல் செயல்களைப் பெறுவதற்கு சக்தி, ஏமாற்றுதல் அல்லது வற்புறுத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாகும். மேலும் பாலியல் சுரண்டல்களுக்காக பெண்கள் கடத்தப்படுகிறார்கள். பல வளர்ந்த நாடுகளில் வயதான மக்கள்தொகை மற்றும் நீரிழிவு நோயின் அதிகரிப்பு ஆகியவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை அதிகரிப்பதால் உறுப்புகளை அகற்றுவதற்காகவும் மனிதர்கள் கடத்தப்படுகின்றனர். இந்த செயல்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 370-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைத் தொழில் முறை, கொத்தடிமை தொழில் முறை குறித்தும் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். முடிவில் நிர்வாகி நிர்மலா நன்றி கூறினார்.


Next Story