விழிப்புணர்வு ஓவியப் போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


விழிப்புணர்வு ஓவியப் போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியியில் நடந்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தேனி

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் இல்லங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உலக அமைதி குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி கோடாங்கிபட்டியில் நடந்தது. இதில் குழந்தைகள் இல்லங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்களில் சிறந்த ஓவியம் வரைந்த 2 பேர் மாநில அளவிலான ஓவியப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா உடனிருந்தார்.


Next Story