விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
திருமருகல் அருேக விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் தீயணைப்புதுறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமருகல் பஸ் நிலையம், திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெரு, நடுக்கடை கடைத்தெரு, திட்டச்சேரி பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு எவ்வாறு பட்டாசு வெடிப்பது மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் திட்டச்சேரி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் திலக் பாபு மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
Related Tags :
Next Story