தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
ஆலங்காயம் பகுதியில்தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
ஆலங்காயம், காவலூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிகளிலும், கிராம பகுதியிலும் அடிக்கடி தீ விபத்து நடைபெறுகின்றது. காட்டுப்பகுதிகளில் மர்ம நபர்கள் தீவைப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு ஆலங்காயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மேகநாதன் தலைமையில் ஆலங்காயம் பஸ் நிலையம், மார்க்கெட் வீதி, மலைரோடு உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது தீ விபத்து தொடர்பாக உடன் தகவல் அளிக்கவும் பொது மக்களிடம் தீயணைப்பு த்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story