பெண்களுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி


பெண்களுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
x

ஆம்பூர் அருகே பெண்களுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சி மற்றும் சிவிடெப் இந்தியா நிறுவனம் இணைந்து பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. ஊராட்சிமன்ற தலைவர் சுவிதா கணேஷ் தலைமை தாங்கினார். உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி கலந்து கொண்டு பெண்களுக்கு அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு சலுகைகள் பற்றியும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொம்மலாட்டம், கலை நிகழ்ச்சியின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊர்பொதுமக்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story