செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

களம்பூரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை

ஆரணி

களம்பூர் பேரூராட்சி சார்பில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இதில் ஒலிம்பியாட் சின்னத்தை உருவாக்கி செண்டை மேளங்கள், தாரை தப்பட்டைகளுடன் களம்பூர் நகரம் முழுவதும் பல்வேறு வகையில் நடனங்களை ஆடிக்கொண்டு ஒலிம்பியாட் போட்டியை பிரதிபலிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை களம்பூர் பேரூராட்சி தலைவர் கே.டி.ஆர்.பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story