அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
முதுகுளத்தூரில் அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் மீகா நாயகம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் துணை அஞ்சல் அதிகாரி திக்விஜயன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு ஊர்வலம் முதுகுளத்தூர் காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம் வழியாக அரசு மருத்துவமனை வரை சென்றடைந்தது. தபால் நிலையத்தில் 30 இன்ச் நீளமும், 20 இன்ச் உயரமும் கொண்ட துணியால் செய்யப்பட்ட தேசியக்கொடி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பேரையூர் துணை அஞ்சல் அதிகாரி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர், பேரையூர், தேரிருவேலி துணை அஞ்சல் மற்றும் கிளை அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story