44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

நெமிலியில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ராணிப்பேட்டை

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நடந்தது. நெமிலியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் பெ.வடிவேலு, நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், தாசில்தார், வட்டார வள்ர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு, ஒலிம்பியாட் செஸ் போட்டியின் ஜோதியினை கையில் ஏந்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஊர்வலமாக சென்றனர்.


Next Story