தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூர், ஜெயங்கொண்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது பள்ளி மாணவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் வருவாய்த்துறை மற்றும் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலமானது ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ரோச் அலெக்சாண்டர், தேர்தல் துணை வட்டாட்சியர் மீனா, வருவாய் ஆய்வாளர் செல்லகணேஷ் ஆகியோர் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலமானது ேகார்ட்டு, பஸ் நிலையம், அண்ணா சிலை, நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் உர்சலாசமந்தா நன்றி கூறினார்.