புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
x

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர்

மன்னார்குடியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகரசபை துணைத்தலைவர் கைலாசம் மற்றும் அரசு அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு ஊர்வலம் மீண்டும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

Next Story