விழிப்புணர்வு நிகழ்ச்சி
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
உடன்குடி:
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் நடவடிக்கையாக டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பேரூராட்சி தலைவர், மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி புதுமனை அன்சாரிநகர் வரை பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்சாரி நகர், கோட்டைவிளை பகுதியிலும் புதுமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 250 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது. புதுமனை வடக்கு தெரு மற்றும் புதுமனை மேலத்தெரு பகுதியில் பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி, செயல் அலுவலர் பாபு. டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டேனியல், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.