விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

பட்டாசு பாதுகாப்பாக தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமலிங்கபுரத்தில் பட்டாசு தொழிலாளர்களிடம் பட்டாசு பாதுகாப்பாக தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் பட்டாசு விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். ராமலிங்கபுரத்தில் சட்ட விரோதமாக கருந்திரி, வெள்ளைதிரி தயாரிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். முறையாக அனுமதி பெற்று தான் பட்டாசு திரியை தயாரிக்க வேண்டும். அனுமதி பெறாமல் பட்டாசு தொழிலில் ஈடுபட்டால் விபத்து ஏற்படும் போது இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story