விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் விருதுநகர் வருமான வரித்துறை சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும், எப்படி செலுத்த வேண்டும், யார், யார் செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முறையாக வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருமானவரித்துறை துணை ஆணையாளர் பூவலிங்கம், அதிகாரிகள் பால்சாமி, கோமதிநாயகம், லட்சுமணன், வருமானவரி ஆய்வாளர் மலையப்பன் அருப்புக்கோட்டை ஆடிட்டர்கள் கிருபா ராஜ்குமார், குமாரசாமி, மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story