சிறுவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிறுவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் திட்டச்சேரி போலீசார் சார்பில் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக்கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், சிறுவர்கள் போதை பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்டவை குறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் சிறுவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Related Tags :
Next Story