கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு நிலையங்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெய் நிலா சுந்தரி தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கவிதா, உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

நிலைய அலுவலர்கள் ரமேஷ், சிவசங்கரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பட்டாசு வெடிக்கும்போது தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். அதிகாரிகள் விளக்கம் அளித்தது குறித்து மாணவிகளிடம் கேள்வி கேட்டு அதற்கு சரியாக பதில் கூறிய 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் கணேசன் நன்றி கூறினார்.


Next Story