வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜோலார்பேட்டையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஜோலார்பேட்டை பகுதியில் வழிப்பறி, செயின் பறிப்பு, பணம், கொள்ளை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜோலார்பேட்டை போலீசார் ரெயில் நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை தாங்கி பேசுகையில், ''முதியோர்கள் ஓய்வூதியம் பெற வரும்போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுக்க சொல்லாதீர்கள். நீங்கள் வங்கிக்கு வரும்போது நகை பணம் ஆகியவற்றை வைக்கவோ எடுக்கவோ வரும்போது உங்களை யாராவது கண்காணித்தால் சந்தேகிக்கும் நபராக இருந்தால் நம்பர் 100 என்ற எண்ணுக்கு போன் செய்து உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். போலீசார் நீங்கள் தெரிவிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்'' என்றார்.