தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்,
லாலாபேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், விபத்துக்கள் நடைபெற்ற பகுதியில் அருகே உள்ள மருத்துவமனைக்கு மட்டுமே விபத்துக்கு உள்ளானவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். எங்களுக்கு தகவல் கிடைத்த படி சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வியாபார நோக்கத்துடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் மிகத் தொலைவில் உள்ள கரூர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதாக தகவல் வந்துள்ளது.இனி வரும் நாட்களில் இதுபோல ஏதும் விபத்து நடைபெற்றால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். விபத்துக்குள்ளான அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் தான் மற்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது. இது குறித்து ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.