மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை, செய்யாறில் நடந்தது.

திருவண்ணாமலை

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை, செய்யாறில் நடந்தது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆகியவை இணைந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கிலும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் 120 கல்லூரி மாணவர்களும், 235 பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி திட்ட விளக்கவுரையாற்றினார்.

பதிவு செய்ய வேண்டும்

அப்போது அவர் பேசுகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக நடைபெறும் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும்.

ஓவ்வொரு மாணவரும் தன்னுடைய லட்சியம் என்னவென்று சிந்தித்து செயலாற்ற வேண்டும். மாணவ, மாணவிகள் அரசு வேலைவாய்ப்பு பெற போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.

இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணையதளமான www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.

செய்யாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மோகனசுந்தரம், "திறன் பயிற்சியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலும், மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் தனபால் "சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு" என்ற தலைப்பிலும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் காந்தி "நிமிர்ந்தே எரியும் நெருப்புக் கீற்று" என்ற தலைப்பிலும் பேசினர்.

முடிவில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர் பாரதி நன்றி கூறினார்.


Next Story