விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சுதா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது, பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் முறை விளக்கம் அளித்தார்கள்.

அதைத்தொடர்ந்து மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story