இளம் பருவ திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


இளம் பருவ திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் இளம் பருவ திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவிகளுக்கு இளம் பருவ திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சரளா தலைமை தாங்கினார். மருந்தாளுனர் தாஸ் முன்னிலை வகித்தார். தொழிற் கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நலத்திட்ட மருத்துவர் கீர்த்தனா கலந்துகொண்டு இளம் பருவ திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விளக்கினார்.

பின்னர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியை புவனா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story