மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அகரம்சேரி ஊராட்யில் நேற்று மின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வடகாத்திப்பட்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அகரம்சேரி மின்வாரிய இளநிலை பொறியாளர் சந்திரசேகரன், மாதனூர் இளநிலை பொறியாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தூண்டு பிரசுரங்களை வழங்கி மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்டி மின்விபத்தை தவிர்க்கலாம், இடி மின்னல் மற்றும் மழைக்காலங்களில் வீட்டில் உள்ள டி.வி., கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஆகிய மின் சாதனங்களை வயர் இணைப்பு எடுத்து மின் சாதனங்கள் பழுதாவதையும், மின்விபத்தையும், தவிர்க்கலாம். நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அது உயிர் ஆபத்தை ஏற்படுத்தும். அவ்வாறு மின் வேலி அமைத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்களில் விளம்பர பலகை, மற்றும் கேபிள் வயர், கட்டுவது குற்றமாகும். மழைக் காலங்களில் மின் மாற்றி, மின் கம்பங்கள் அருகே செல்லக்கூடாது என்பதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.