சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீஸ்காரர் ஆனந்த் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும், செல்போன் பேசிக்கொண்டு மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும், 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
Related Tags :
Next Story