மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், செம்போடை, திருக்குவளை ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. டாடா டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து உலகத்தரம் வாய்ந்த இண்டஸ்ட்ரி 4.0 தரத்தினாலான தொழில்நுட்ப மையங்களை உருவாக்கி உள்ளது. நாகை, செம்போடை, திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் மற்ற தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க நாளை (வியாழக்கிழமை) நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை அரசு தொழிற்பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.


Next Story