காமாட்சிபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு பள்ளி செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் அர்ஜூனப்பெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர் சங்கரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணசாமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், காமாட்சிபுரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
Related Tags :
Next Story