போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
x

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் வருவாய்த்துறை மற்றும் அரசு கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் வேல்முருகன் முன்னிலை வகித்தார். அரசு கல்லூரி முன்பு தொடங்கிய பேரணியை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தாலுகா அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் துணை தாசில்தார்கள் ஜஸ்டின் பெர்னாண்டோ, பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மெய்யப்பன், சிதம்பரம், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், சண்முகம் மற்றும் மாணவ, மாணவிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story