விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

பாளையங்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மனநல பிரிவு சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டீன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் உதவி முதல்வர் சாந்தாராம், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். ேபரணி முடிந்த பின்னர் கருத்தரங்கம் நடந்தது. இதில் டாக்டர் ரமேஷ்பூபதி, ராமானுஜம், காட்சன், சீனிவாசன், கந்தசாமி, வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.


Next Story