விழிப்புணர்வு பேரணி
மருத்துவக்கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி அரசு மருத்துவக்கல்லூரியில் முடிவடைந்தது. விபத்திற்கு பிறகு உயிரை காப்பாற்ற செய்ய வேண்டியவைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் மேகநாதரெட்டி பொது மக்களுக்கு வழங்கினார். இதில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, பொது அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கோகுல்ராஜ், மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story