மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி


மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில், நவ.17-

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியை விமலிவின்சென்ட், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய், நாட்டரசன்கோட்டை மருத்துவர் நிவேதிதா மற்றும் குழுவினர், பள்ளி மேலாண்மை குழு தலைவி அன்னலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.


Next Story