விழிப்புணர்வு பேரணி
எழுத்தறிவுத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் பாவாலி ரோட்டில் அமைந்துள்ள முஸ்லிம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் தலைமையில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், வாழ்க்கையை வசந்தமாக்குவது கல்வி, கல்வி கற்போம் எழுதுவோம், கல்லாமை இல்லாமை ஆக்குவோம் என்பன உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பேரணியானது விருதுநகர் - பாவாலி ரோட்டில் அமைந்துள்ள முஸ்லிம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆரம்பித்து பாவாலி ரோடு, மாவட்ட மைய நூலக அலுவலகம் வழியாக சென்று மீண்டும் நகராட்சி பள்ளியில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story