பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆத்தூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை பேரூராட்சி தலைவர் எ.கே.கமால்தீன் தொடங்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வைக்க வேண்டும், மஞ்சப்பை பயன்பாடு போன்றவை குறித்து கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். இதில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி முருகன், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி, சுகாதார மேற்பார்வையாளர் நாராயணன் மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினர், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story